துறவைத் துறந்தவள் - பாகம்-1
துறவைத் துறந்தவள் நான்தான்! துறவைத் துறந்தவள் நான்தான்! ‘சாகும்வரை சமூகத்தைத் தவிர எதையும் சந்திக்கவோ, சிந்திக்கவோ கூடாது’, என சபிக்கப்பட்ட வரம் பெற்றவர்களில் நானும் ஒருத்தி. எல்லாரையும் போல இருந்துவிட்டுப் போகலாம் என்னும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை வட்டத்தை விட்டு எட்டி நிற்க இயன்றவரை முயன்றவள், முயல்பவள் நான். அறியாத வயதில் புரியாத ஒரு ஆசை- எல்லாரையும் விட சிறப்பாய் ஏதோ ஒன்றை செய்துவிட வேண்டுமென்று! ஆசை விருப்பமாகி, விருப்பம் பெரு நெருப்பாகி வளர் இளம் வயதில் இருந்து என்னோடு கூடவே வளர்ந்து வந்தது. ஆனால் அதற்கு சரியான அடையாளம் கொடுக்க நான் அறிந்திருக்கவில்லை. அறிந்தவர்கள் யாரும் அருகிலும் இல்லை. குடும்ப சூழல், கிராமத்தின் சூழல், பள்ளியின் சூழல், எல்லாம் சேர்த்து எனக்கு அறிமுகப்படுத்திய பாதை- ‘மதம்’. என் பெற்றோர் தீவிர மதப் பற்றாளர்கள்.அதிலும் என் அம்மா ஐயையோ! சொல்லவே வேண்டாம், ஆன்மிகம் தான் அவரின் இயக்க ஆற்றலே. என் கிராமம் மத நம்பிக்கையில் தொன்மைமிகு கிராமம்; படித்த பள்ளியும...